Thursday, 13 January 2011

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் கடும்மழை

 பெய்து வருகிறது. இதனால் பாடசாலைகளிலும் பொதுக் கட்டிடங்களிலும் தஞ்சமடைந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஆலங்கேணி,ஈச்சந்தீவு கிராமங்களைச் சேர்ந்த 800 பேர் தற்போது ஆலங்கேணி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் 600 பேர் வரை இப்பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர். நேற்று புதன்கிழமை இந்த எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. இக்குடும்பங்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை இலங்கை ஒஃபர் நிறுவனத்தின் திருகோணமலை அலுவலகம் நேற்று புதன்கிழமை தொடக்கம் வழங்க நடவடிக்கையெடுத்துள்ளது.
முதல் கட்டமாக ஆயிரம் சமைத்த உணவுப் பார்சல்கள் திருகோணமலை நகர மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு புதன்கிழமை நண்பகல் ஆலங்கேணி பாடசாலையில் தங்கியுள்ள அகதிக் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக ஒஃபர் நிறுவன திருகோணமலை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
அகதிகளுக்கு உதவுவதற்காக ஒஃபர் நிறுவனம் திருகோணமலை நகரின் பல பாகங்களிலும் மக்களிடமிருந்து சமைத்த உணவுப் பொருட்கள், உலர் உணவுப் பொருட்களை சேகரித்து வருகிறது.
இதேவேளை, திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்து ஆரம்பப் பாடசாலைக் கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 200 வரையான அகதிகளுக்கு திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்தினர் சமைத்த உணவுப் பார்சல்கள் மற்றும் உதவிகளை வழங்கினர்.
மூதூரில்...
மூதூர்ப் பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பாடசாலைகள்,பொதுக்கட்டிடங்களில் மூதூர் தள வைத்தியசாலையினால் நடமாடும் வைத்திய முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே நடமாடும் வைத்திய முகாம்களை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி

No comments:

Post a Comment