தேற்றாத்தீவு மக்களின் துயர் மனதை உருக்கி உணர்வாக்குது நண்பர்களே. முடிந்தளவு யாருக்காவது எங்காவது உதவிக்கொள்ளுங்கள். உங்கள் உதவிகள் தண்ணீர் போத்தல்கள், உலருணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால் மா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விசேட ஆடைகள் என்பனவற்றை வழங்குங்கள்.
(நன்றி பேதுர்சன் ஒருங்கிணைத்துதந்ததற்கு)
இந்த தேசத்தின் குரல் எங்கெல்லாம் ஆர்க்குமோ இதயத்தை வருடி உளம் கனிந்து உதவும் கரங்கள் பெருகட்டும். உறவுகளின் உணர்வு சொந்த மண்ணின் மணத்தில் இருக்குமே... பால்வடியும் நிலம் இங்கு தண்ணீரால் நிரம்பி வழியுது. கண்ணீரின் கனம் தாங்காமல் உளம் கருகி வேர்க்கிறது. இதுவரை எமது அனர்த்த முன்னாயத்தங்களுடன் சமாளிக்கமுடிந்ததே. இனியும் ஐயகோ.... தாங்காது வெள்ளம் என்பது என்ன என்று அறிய வாங்கோ .பாதைகள் முடங்கப்படுகிறது. கடலின் துன்பம் கண்டோம் சுனாமியில் மழையின் துன்பம் காண்கிறோம் இப்பொழுதுகளில். தாங்க முடியவில்லை. அன்றாடம் உழைக்கும் நமது ஊர் மக்கள் அல்லல் படும் தன்மை ஐயனே..... கூலித்தொழில் செய்துவாழும் உறவுகளின் உறக்கம் கலைத்த வெள்ளம் எதை தேடி வதைக்கிறதோ......... தாகம் தீர்க்கும் தண்ணீரின் தாகம் என்ன சொல்வாயோ.
No comments:
Post a Comment