Tuesday, 18 January 2011

வெள்ளம் 48,679 மாடுகள் 22,279 ஆடுகள் 172,884 கோழிகள் இறந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 48,679 மாடுகள், 22,279 ஆடுகள், மற்றும் 172,884 கோழிகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளால் இங்கு பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகள் தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் குறைந்தது 50 யானைகள் மரணமாகியிருப்பதாக வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் கூறியுள்ளது.

இந்த இயற்கைப் பேரழிவினால் யானைகள் மற்றும் ஏனைய விலங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்ள தொடர்பாக சரியான விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருவெள்ளத்தினால் சிறிலங்காவில் உள்ள லகுகல, சோமாவதி, மாதுறு ஓயா, குமண, கவுடுல்ல ஆகிய வனவிலங்கு சரணாலயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment