தற்போது நிலவும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை மாவட்டங்கள்அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 4 இலட்சத்து 82 ஆயிரத்து 800 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏறாவூர் பற்று தெற்கு கோரளைப் பற்று ஏறாவூர் மத்திய கோரளைப் பற்று வடக்கு மற்றும் வடமேல் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்முனைபற்று போரதீவுப்பற்று உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் பிரதான குளங்கள் பெருக்கெடுத்துள்ளமையினால் வீடுகள் பாதைகள் மற்றும் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிண்ணியா கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல குடும்பங்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் 146 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார். தொடர்ந்தும் மழை பெய்துவருவதால் நிவாரணப் பணிகளை முன்னெடுப் பதில் சிரமம் காணப்படுகின்ற போதும், சிரமங்களுக்கு மத்தியில் இம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு களை வழங்கி வருவதாகவும், பெரும்பாலான வீதிகளை மூடி வெள்ளம் நிற்ப தால் படகுகளில் சென்றே நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், படகுகள் மூலம் செல்லமுடியாத இடங்களுக்கு ஹெலிகொப்டர் மூலமே செல்ல வேண்டியிருப்பதாகவும் விமலநாதன் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் ஹெலி கொப்டரைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான நிதியுதவிகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு வழங்கி வருகிறது என்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளைபொலன்னறுவை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் பாதை உடைந்துள்ள நிலைகள் காரணமாக எரிபொருள் கொண்டு வரும் கனரக வாகனங்களின் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக மட்டக்களப்பு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பேற்றோல், டீசல் எரிபொருட்கள் முற்றாக முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகின்ற போதும், அதுவும் விரைவில் முடிந்துவிடும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிகிறது.
மட்டக்களப்பில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஒரு இலட்சத்து 32 ஆயிரம் பரப்பளவு பயிர்ச்செய்கை நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதோடு, பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வருமாறு புலம் பெயர்ந்த மக்களை அங்பகுள்ள உறவுகள் கேட்டுள்ளனர்
இதனால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதோடு, பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment