குறிப்பாக இப்பிரதேசங்களில் உள்ள மக்களின் இயல்புவாழ்வை முற்றாக முடங்கி, நீண்ட கால குறுகிய கால வாழ்வாதாத்தை சிதைத்து ஆழித்து,கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. அந்த யுத்த அவலங்களைச்சந்தித்த அந்த மக்களையே தேடி அடித்ததுபோன்ற ஒரு உணர்வு திருக்கோணமலை மாவட்டத்தின் பாதிப்பின் தன்மையையும் விபரங்களையும் பார்க்கின்றபோது உணரமுடிகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் பாதிப்பின் விபரங்களைப்பாhர்க்கின்றபோது மிகமோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முதல் நிலையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும் இரண்டாவது நிலையில் வெருகலும் அதற்கு அடுத்த படியாக ஏனைய பிரதேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விருபிரதேசங்களும் மட்டக்களப்பு.பொலநறுவை மாவட்டங்களின் ஒருபகுதி வெள்ள நீரையும் தமது பிரதேசத்தில் வாங்கி கடலுக்கு அனுப்பும் கடமையைக் கொண்டதால் இந்த மோசமான நிலமைகளை ஏதிர் கொண்டன.வெருகல் கங்கை வெருகல்முகத்துவாரத்திலும்,அல்லைக்கங்கைகள் மூதூர் குடாக்கடலிலும் விழுகின்றன.
குறிப்பாக மகாவலியின் பிரதான இருகங்கைகளுக்கிடையில் இப்பிரதேசங்கள் அகப்பட்டிருப்பதனால்மழை நின்றாலும் வெள்ளத்தின் அகோரம் நாளுக்கு நாள் அதிகரித்தது.வெருகல் கங்கையின் பெருக்கெடுப்பால்
வெருகல்ப்பிரதேசத்தின் 10 கிராமசேவகர்பிரிவில் 9 கிராமசேவகர் பிரிவு வெள்ளத்தில் மூழ்கின.
உள்ளக போக்குவரத்து முற்றாக முடங்க தனியார் மீன்படி படகுகள் ஏ15 பிரதான விதி வழியாக பயணிக்கும் துற்பாக்கிய நிலைதோன்றின. புதனன்று நண்பகல் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரனுடன் தொடர்புகொண்ட வேளை “நான் படகில் பூநகரில் இருந்து மாவடிச்சேனைக்கு உணவுப்பொருட்கள் எடுத்துக்கொண்டு செல்கின்றேன் இப்பயணத்திற்கு இரண்டரை மணித்தியாலங்கள் எடுக்கும் உணவு பொருட்கள் கெலிகொப்ரர் மூலம் பூநகருக்கு கொண்டு வந்து படகுகள் மூலம் மக்கள் இருக்கம் இடங்களுக்கு விநியோகிக்கின்றோம் “எனவும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினாhர்.
இதேபோன்று அனைத்து பிரிவிற்குமான போக்குவரத்தும் படகுமூலமே இடம்பெறுகின்றது. எனத்தெரிவித்தார் .இதேவேளை இந்த முடக்கம் பல நாட்களாக தொடர்ந்த நிலையில் பொது இடங்களில் பாடசாலைகளில் இருப்பவர்களுக்கே இந்த உணவுப்பொருட்களும் சென்றடைந்தன அவர்களைப்பொறுத்தவரை கொட்டும் மழை வெள்ளம்’ எனபனவற்றிக்குள் உணவு சமைப்பது எப்படி, விறகு எங்கு தேடுவது என சொல்லொணா துயரங்களுக்கு மத்தியில் அன்றாட உணவை பெறும் நிலமை காணப்பட்டது.
அதுமட்டுமன்றி மழைக்கு மத்தியில் நாளுக்கு நாள் உயரும் வெள்ளச்செய்தி குள உடைப்புகள் மாவிலாறு அணை திறப்பு ,,உடைப்பு அபாயச்செய்திகள் மக்களை மிகவும் கிலி கொள்ள வைத்தன.,உள்ளக போக்குவரத்து துண்டிக்கப்ட்டதனால் பல அன்றாடத்தேவைகள் முடக்கப்பட்டன.தொழில்கள்யாவும் முடங்கின. மீன்பிடி விவசாயத்தைப்பிரதானமாக கொண்ட இப்பிரதேசத்தின் இவ்வாழ்வாதாரங்களில் மின்பிடி முற்றாக முடங்கின. கடலுக்குச்சென்ற ஒருவர் கடந்த வாரத்தில் படகு கவிழ்ந்து இறந்ததும் அறிவிக்கப்பட்டது.;.விவசாயம் முற்றாக .அழிந்துபோயுள்ளன.
.சுகாதாரம் சுத்தமான குடிநீர் எனபன பெரும் பிரச்சனையாகின. கிணறு மலசல கூடங்கள் எதுவுமே தெரியாத நிலையில் வெள்ளம் ஏற்பட்டநிலையில் மக்களின் துயரம் சொல்லமுடியாதவையாக இருந்தது.வெருகல் பிரதேச செயலகம் வெள்ளத்தில் சிக்குண்ட நிலையில் தாம் மேல் மாடியில் இருந்து தங்கி நின்று பணியாற்றினாலும்செயலகத்தில்பணியாற்றிய பெண்கள் தமது அன்றாடப்பிரச்சனைக்கு முகம் கொடுக்கமுடியாத நிலை இருந்தது இந்தநிலையில் மக்களின் நிலமையைப்பாருங்களேன் என ஒருகணத்தில் பிரதேச செயலாளர் குறிப்பிட்டது.சிந்திக வைத்தது.
வெருகல் பிரதேசம் 2007 பிற்பகுதியில் மீழக்குடியமர்த்தப்பட்டு, வாழ்வாதாரத்திற்கான கட்டு மானபோரட்டம் இடம்பெற்று வந்த நிலையில் இந்த வெள்ளம் வெருகலை ஆக்கிரமித்தது. மட்டக்களப்பு வெருகல் பிரதேச பிரதான போக்கு வரத்து திருகோணமலை வெருகல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் ஒடுட்டு மொத்த மக்களுக்கான சகலதேவைகளும் மறுக்கப்ட்டன .பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டன..உதவுவதற்கு விரும்பியவர்களும்செல்லமுடியாத நிலமை ஏற்பட்டது.
;. மூது}ர் மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களின் மக்கள் குடியிருப்புகள் எங்கும் கடலாக காட்சியளித்தது எங்குபார்த்தாலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து காணப்பட்டதனை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.
2006 ம் ஆண்டு ஏற்பட்ட மல்டி தாக்குதலுக்கு மக்கள் அஞ்சி நடுங்கி மரத்தின் கீழ் ஒளிந்தபோன்று மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் சிறுகைக்குழந்தைகளுடனும் நிற்பதனை காணக்கூடியதாக இரந்தது
இலங்கையின் நெல் உற்பத்தியில் அதிக பங்களிப்பு செய்து வந்த சகல வயல் வெளிகளிலும் 3 அடிக்குமேல் நிர்மட்டம் உயர்ந்து பரவிக்காணப்பட்டன.மூதார்பிரதேசத்தின் பிரதானதோப்பூர் உல்லைக்குளம் உடைப்பெடுத்தது.அதுபோன்று மூதார்கிழக்கில் 6 இற்கும் அதிகமான சிறுகுளங்கள் உடைப்பெடுத்தன. கங்குவேலி வவுணாவில் பண்ட் உடைப்பெடுத்தன.மேட்டு நிலப்பயிர்கள் வீட்டுத்தோட்டங்கள் எல்லாம் தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக அழிந்துபோயுள்ளன.கங்கையோரங்களையும் குளங்களையும் நாடி வளர்த்து வந்த கால்நடைகள் பல வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றதாகவும் பல குளிர் காரமாக இறந்துள்ளதாகவும்விவசாயிகள் கவலை வெளியிடுகினறன. ஏஞ்சிய சில சேனைப்பயிர்ச்செய்கைகளை யானைகள் துவம்சம் செய்ததாக கிராமவிவாயிகள் தெரிவித்தனர்.
தம்பலகாமம்,குச்சவெளி கிண்ணியாப்பிரிவுகளில் கந்தளாய்குளம்மற்றும் யான்ஓயாகுளம் திறந்துவிட்டதனால்ஏற்பட்டவெள்ளத்தின் காரணமாக வேளாண்மைசெய்கைகள் வெள்ளக்காடாகின.
திரியாயில்விவசாயக்காவலுக்குச்சென்ற பல விவசாயிகள் மரத்திலேறி தங்கியிருந்து பின்னர் பலரின் உதவியுடன் மீண்டுள்ளனர். இவ்வாறு எங்கு பார்த்தாலும் வெள்ளத்தின் அவலக்குரல் கதைகள் தொடராகஒலித்த வண்ணமே இருந்தன.
மாவட்டத்தின் விபரங்களைப்பொறுத்தவரை நாளுக்கு நாள் மாறுபட்டவண்ணம் இருந்தன.12ம்திகதி 87 நிலயங்களில் 7824 குடும்பங்களைச்சார்ந்த,29203பேர் என வந்தது. 13ம்திகதி 62 நிலயங்களில் 5148குடும்பங்களைச்சார்ந்த 19140 பேர் இடம்பெயர்ந்ததாக அரச அதிபரின் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பாதிக்கப்ட்ட எல்லோரும் முகாமிற்குபோகவில்லை.அன்றாட தொழில் ஈடுபடும் மற்றும் மாற்றுவழி தேடமுடியாத குறிப்பிட்ட சிலரேமுகாம்களுக்சென்றனர்.மலகூடப்பிரச்சனை பொது இடங்களில் இருந்த இடப்பிரச்சனை சுகாதார அபாயம் என பலவற்றாலும் மக்கள்சிறுசிறு குளுக்களாக பல இடங்களிலும் தங்கியிருந்தனர்.எனவும் கிராமமட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.;இதற்கிடையில் போக்குவரத்து துண்டிக்கப்ட்ட கிராமங்களில் பொருட்களின் விலை கிடுகிடு என ஏறிக்காணப்பட்டன. பொருட்தட்டுப்பாடும் ஏறப்பட்டன.பெற்றோல் டீசல் முற்றாக இல்லாமல் பெரும் பிரச்சனையை நிவாரணப்பணியாளர்கள் அரச அதிகாரிகள் சந்தித்தனர்;.
விவசாயிகளின் அழிவு தொடர்பாக தற்காலிகமான அழிவு தொடர்பான அறிக்கையொன்றை கச்சேரி வெளியிட்டிருந்து.அதன்படி மூதூரில் 7603 கெக்டேயர் மூதூரிலும் குச்சவெளியில் 7809 கெக்டேயரும், தம்பலகமத்தில் 3000 கெக்டேயரும். வெருகலில் 1750கெக்ரேயரும்,கிண்ணியாவில் 4118கெக்ரேயர் நெல்வயல்களும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் மழை போக்குவரத்தே செய்யமுடியாத சூழுல் வீட்டிலிருந்துவெளியேறக்கூட முடியாத நிலையில் இத்தரவு எந்தளவிற்கு உறுதிப்பாடானவை என்று சொல்லமுடியாது எதிர்பார்க்கவும் முடியாது .இந்தசூலில் விவசாயிகளின் அழிவு எனபது மிகமிக அதிகமானதாகவே கருதுப்படுகின்றது.இதற்கிடையில் நீண்டகாலநோக்கில் குளங்கள் கால்வாய்களின் கட்டமைப்புக்களின் அழிவும் அது மக்களுக்கு தரப்போகும் பாதிப்பும் மிக தாக்கத்தை ஏற்படுத்தும். அரசுமற்றும் அரசுசாரா நிறுவனங்களின் உதவி மற்றும் தம்மிடமிருந்த மிச்ச சொச்சங்களயும் பயன்படுத்தி முழுமூச்சுடன் செய்யப்பட்டமாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான விவசாய நடவடிக்கை எனபனவற்றின பாதிப்பு சரியாக கணக்கெடுக்கப்பட காலம் செல்லும்.
இந்த நிலையில் யுத்த அகதி வாழ்வில் இருந்து மீண்டு இயல்புநிலைக்குவரத்துடித்த மக்களின் வயிற்றுப்பிழைப்புக்கு இந்த அனர்த்தம் ஆப்பு வைத்துள்ளது.மீண்டும் ஏதிலிகள் என்ற நிலைக்கிட்டுச்சென்றுள்ளது.மட்டக்களப்புக்குவந்த அனத்தமுகாமைத்துவ அமைச்சர் பாதிக்கப்ட்டஅனைத்து கிராமக்களுக்கும் நிவாரணம் உலர்உணவு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.ஆனால் இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் தான் உலர் உணவு நிவாரணம் என்றெல்லாம் குளப்பகரமான அறிவுப்புகள் வந்தவண்ணமுள்ளன.
இ.ந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்கறியாகியுள்ள நிலையில் மூதூர் வலயக்கல்விப்பிரிவில் இன்று திங்கள்கிழமை (17.01.2011) 38 பாடசாலைகள் மட்டுமே ஆரம்பிக்கபடவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர். அ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார். 81 பாடசாலைகளில்ஏனையவற்றில் வெள்ளமுள்ளது. சிலவற்றில் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் இதன்காரணமாக இப்பாடசாலைகளை ஆரம்ப்பிப்பது தொடா்பாக இன்று தான் முடிவெடுக்க முடியும்.
இதேவேளை வெருகல் பிரிவில் பூமரத்தடிச்சேனை வித்தியாலயம் மட்டுமே ஆரம்பிக்கும்சூழல் உள்ளது ஏனைய பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது. வெருகலில் 16 பாடசாலைகளில் இரண்டைத்தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளிற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. மூதூரில் 9 பாடசாலைகளில் வெள்ளப்பாதிப்புஏற்பட்டுள்ளது. இதனால் பாடசாலை சொத்துக்களுக்கும் பாதிப்புஏற்பட்டுள்ளது. எமது மூதூர் வலயத்தில் மொத்தம் 23 பாடசாலைகள் வெள்ளம் ஏறி பாதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள் வெள்ளம் காரணமாக பல கட்டிடம் மற்றும் மலகூடங்களும்சேதமடைந்துள்ளன.அல்லது ஊறியுள்ளன. இதனால் திருத்தப்பணிகள்மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. எனவும் தெரிவித்தார் மட்டக்களப்பு போன்ற தூர இடங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் வரமுடியாத கூழல் உள்ளது.ஏனெனில் தொடர்ந்து வெருகல் மட்டக்களாப்பு வீpதி வெள்ளத்தில மூழ்கியுள்ளன.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் தமது ஆடைகள் மற்றும் கல்வி உபகரணங்களையும் இழந்த நிலையில் உள்ளனர் இவர்களுக்கான உதவிகள்தேவைப்படுவதாகவும் பாடசாலைகளை துப்பரவுசெய்யவேண்டியதேவையுள்ளன.மற்றும் குடிநீர் மலகூடங்கள் நிறைவடைந்து அசுத்தப்படுத்தப்பட்டுள்ளன.எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனனர்
இது மீழக்கட்டியெழுப்ப மேலும் பல வருடங்கள் செல்லப்போகின்றன.ஏற்கனவே இருக்கும் விலைவாசி ஏற்றத்தில் நெல்ஏற்றுமதி செய்த கிராமங்கள் அவற்றுக்காக காத்திருக்க வேண்டிய சூழல்ஏற்படப்போகின்றது. யுத்த சூழுலில் இருந்து இன்னும் மீழக்குடியமரபோராடும் மக்கள் மூதூரில் இருக்கும் நிலையில் இந்த வாழ்வாதாரச்சிதைப்பு மேலும் மக்களை பெரும் அழுத்தத்திற்குள்ளாக்கியுள்ளது.உழவரின் பொங்கல் திருநாள் இம்முறையும் கைவிட்டுவிட்டது.கவலைக்குரிய நாளாகிவிட்டது. அன்றாடம் அரிசிக்கும் பருப்புக்கும் மங்களை ஆலாய்ப்பறக்கவைத்துள்ளது.எனபது வேதனையின் இறுதி உச்சத்தில் உள்ளது.
இதன்படி தேவைகள் பல அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
1 பாடசாலை உபகரணங்கள்.
2.மாணவர்களுக்கான உடைகள் புத்தகங்கள்
3.பால்மா .சத்துணவு,
4. சாதாரண உடைகள்,
5.பெற்சீற் பாய்கள்,பாத்திரங்கள்.
6.தொழில் ஊக்குவிப்புகள் ,வாழ்வாதாரம்
7.கிணறு சுத்தப்படுத்தல்,சுத்தமான குடிநீர்
No comments:
Post a Comment