Thursday, 13 January 2011

மூதூர் கிழக்கில்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்தைச் சுற்றிலும் வெள்ள நீர் இருப்பதால் அங்கிருந்து படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கான தரைவழிப் போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் காட்டு வெள்ளம் காரணமாக சில இடங்களில் 6 அடிக்கு வெள்ள நீர் பாய்கிறது. ஈச்சிலம்பற்று, வெருகல், முகத்துவாரம், உப்பூறல், மாவடிச்சேனை, ஆனைத்தீவு போன்ற கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. 901 குடும்பத்தினர் இடம்பெயர்ந்துள்ளதால் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்குள் நீர் புகுந்துள்ளதால் அங்கிருந்த நோயாளிகள் சேருநுவர வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர். சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் படகின் மூலமே தமது சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சேருவில பிரதேச செயலாளர் பிரிவிலும் 1000 குடும்பங்கள் இடம்பெயர்ந்து 5 நலன்பு

No comments:

Post a Comment