கிழக்கு மாகாணம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள மக்களுக்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள உறவுகளே உதவுங்கள்.
Wednesday, 19 January 2011
Tuesday, 18 January 2011
வெள்ளம் 48,679 மாடுகள் 22,279 ஆடுகள் 172,884 கோழிகள் இறந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 48,679 மாடுகள், 22,279 ஆடுகள், மற்றும் 172,884 கோழிகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளால் இங்கு பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகள் தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளால் இங்கு பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகள் தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் குறைந்தது 50 யானைகள் மரணமாகியிருப்பதாக வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் கூறியுள்ளது.
இந்த இயற்கைப் பேரழிவினால் யானைகள் மற்றும் ஏனைய விலங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்ள தொடர்பாக சரியான விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருவெள்ளத்தினால் சிறிலங்காவில் உள்ள லகுகல, சோமாவதி, மாதுறு ஓயா, குமண, கவுடுல்ல ஆகிய வனவிலங்கு சரணாலயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த இயற்கைப் பேரழிவினால் யானைகள் மற்றும் ஏனைய விலங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்ள தொடர்பாக சரியான விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருவெள்ளத்தினால் சிறிலங்காவில் உள்ள லகுகல, சோமாவதி, மாதுறு ஓயா, குமண, கவுடுல்ல ஆகிய வனவிலங்கு சரணாலயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
திருக்கோணமலை மாவட்ட பாதிப்பின் தன்மை
குறிப்பாக இப்பிரதேசங்களில் உள்ள மக்களின் இயல்புவாழ்வை முற்றாக முடங்கி, நீண்ட கால குறுகிய கால வாழ்வாதாத்தை சிதைத்து ஆழித்து,கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. அந்த யுத்த அவலங்களைச்சந்தித்த அந்த மக்களையே தேடி அடித்ததுபோன்ற ஒரு உணர்வு திருக்கோணமலை மாவட்டத்தின் பாதிப்பின் தன்மையையும் விபரங்களையும் பார்க்கின்றபோது உணரமுடிகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் பாதிப்பின் விபரங்களைப்பாhர்க்கின்றபோது மிகமோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முதல் நிலையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும் இரண்டாவது நிலையில் வெருகலும் அதற்கு அடுத்த படியாக ஏனைய பிரதேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விருபிரதேசங்களும் மட்டக்களப்பு.பொலநறுவை மாவட்டங்களின் ஒருபகுதி வெள்ள நீரையும் தமது பிரதேசத்தில் வாங்கி கடலுக்கு அனுப்பும் கடமையைக் கொண்டதால் இந்த மோசமான நிலமைகளை ஏதிர் கொண்டன.வெருகல் கங்கை வெருகல்முகத்துவாரத்திலும்,அல்லைக்கங்கைகள் மூதூர் குடாக்கடலிலும் விழுகின்றன.
குறிப்பாக மகாவலியின் பிரதான இருகங்கைகளுக்கிடையில் இப்பிரதேசங்கள் அகப்பட்டிருப்பதனால்மழை நின்றாலும் வெள்ளத்தின் அகோரம் நாளுக்கு நாள் அதிகரித்தது.வெருகல் கங்கையின் பெருக்கெடுப்பால்
வெருகல்ப்பிரதேசத்தின் 10 கிராமசேவகர்பிரிவில் 9 கிராமசேவகர் பிரிவு வெள்ளத்தில் மூழ்கின.
உள்ளக போக்குவரத்து முற்றாக முடங்க தனியார் மீன்படி படகுகள் ஏ15 பிரதான விதி வழியாக பயணிக்கும் துற்பாக்கிய நிலைதோன்றின. புதனன்று நண்பகல் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரனுடன் தொடர்புகொண்ட வேளை “நான் படகில் பூநகரில் இருந்து மாவடிச்சேனைக்கு உணவுப்பொருட்கள் எடுத்துக்கொண்டு செல்கின்றேன் இப்பயணத்திற்கு இரண்டரை மணித்தியாலங்கள் எடுக்கும் உணவு பொருட்கள் கெலிகொப்ரர் மூலம் பூநகருக்கு கொண்டு வந்து படகுகள் மூலம் மக்கள் இருக்கம் இடங்களுக்கு விநியோகிக்கின்றோம் “எனவும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினாhர்.
இதேபோன்று அனைத்து பிரிவிற்குமான போக்குவரத்தும் படகுமூலமே இடம்பெறுகின்றது. எனத்தெரிவித்தார் .இதேவேளை இந்த முடக்கம் பல நாட்களாக தொடர்ந்த நிலையில் பொது இடங்களில் பாடசாலைகளில் இருப்பவர்களுக்கே இந்த உணவுப்பொருட்களும் சென்றடைந்தன அவர்களைப்பொறுத்தவரை கொட்டும் மழை வெள்ளம்’ எனபனவற்றிக்குள் உணவு சமைப்பது எப்படி, விறகு எங்கு தேடுவது என சொல்லொணா துயரங்களுக்கு மத்தியில் அன்றாட உணவை பெறும் நிலமை காணப்பட்டது.
அதுமட்டுமன்றி மழைக்கு மத்தியில் நாளுக்கு நாள் உயரும் வெள்ளச்செய்தி குள உடைப்புகள் மாவிலாறு அணை திறப்பு ,,உடைப்பு அபாயச்செய்திகள் மக்களை மிகவும் கிலி கொள்ள வைத்தன.,உள்ளக போக்குவரத்து துண்டிக்கப்ட்டதனால் பல அன்றாடத்தேவைகள் முடக்கப்பட்டன.தொழில்கள்யாவும் முடங்கின. மீன்பிடி விவசாயத்தைப்பிரதானமாக கொண்ட இப்பிரதேசத்தின் இவ்வாழ்வாதாரங்களில் மின்பிடி முற்றாக முடங்கின. கடலுக்குச்சென்ற ஒருவர் கடந்த வாரத்தில் படகு கவிழ்ந்து இறந்ததும் அறிவிக்கப்பட்டது.;.விவசாயம் முற்றாக .அழிந்துபோயுள்ளன.
.சுகாதாரம் சுத்தமான குடிநீர் எனபன பெரும் பிரச்சனையாகின. கிணறு மலசல கூடங்கள் எதுவுமே தெரியாத நிலையில் வெள்ளம் ஏற்பட்டநிலையில் மக்களின் துயரம் சொல்லமுடியாதவையாக இருந்தது.வெருகல் பிரதேச செயலகம் வெள்ளத்தில் சிக்குண்ட நிலையில் தாம் மேல் மாடியில் இருந்து தங்கி நின்று பணியாற்றினாலும்செயலகத்தில்பணியாற்றிய பெண்கள் தமது அன்றாடப்பிரச்சனைக்கு முகம் கொடுக்கமுடியாத நிலை இருந்தது இந்தநிலையில் மக்களின் நிலமையைப்பாருங்களேன் என ஒருகணத்தில் பிரதேச செயலாளர் குறிப்பிட்டது.சிந்திக வைத்தது.
வெருகல் பிரதேசம் 2007 பிற்பகுதியில் மீழக்குடியமர்த்தப்பட்டு, வாழ்வாதாரத்திற்கான கட்டு மானபோரட்டம் இடம்பெற்று வந்த நிலையில் இந்த வெள்ளம் வெருகலை ஆக்கிரமித்தது. மட்டக்களப்பு வெருகல் பிரதேச பிரதான போக்கு வரத்து திருகோணமலை வெருகல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் ஒடுட்டு மொத்த மக்களுக்கான சகலதேவைகளும் மறுக்கப்ட்டன .பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டன..உதவுவதற்கு விரும்பியவர்களும்செல்லமுடியாத நிலமை ஏற்பட்டது.
;. மூது}ர் மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்களின் மக்கள் குடியிருப்புகள் எங்கும் கடலாக காட்சியளித்தது எங்குபார்த்தாலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து காணப்பட்டதனை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.
2006 ம் ஆண்டு ஏற்பட்ட மல்டி தாக்குதலுக்கு மக்கள் அஞ்சி நடுங்கி மரத்தின் கீழ் ஒளிந்தபோன்று மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் சிறுகைக்குழந்தைகளுடனும் நிற்பதனை காணக்கூடியதாக இரந்தது
இலங்கையின் நெல் உற்பத்தியில் அதிக பங்களிப்பு செய்து வந்த சகல வயல் வெளிகளிலும் 3 அடிக்குமேல் நிர்மட்டம் உயர்ந்து பரவிக்காணப்பட்டன.மூதார்பிரதேசத்தின் பிரதானதோப்பூர் உல்லைக்குளம் உடைப்பெடுத்தது.அதுபோன்று மூதார்கிழக்கில் 6 இற்கும் அதிகமான சிறுகுளங்கள் உடைப்பெடுத்தன. கங்குவேலி வவுணாவில் பண்ட் உடைப்பெடுத்தன.மேட்டு நிலப்பயிர்கள் வீட்டுத்தோட்டங்கள் எல்லாம் தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக அழிந்துபோயுள்ளன.கங்கையோரங்களையும் குளங்களையும் நாடி வளர்த்து வந்த கால்நடைகள் பல வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றதாகவும் பல குளிர் காரமாக இறந்துள்ளதாகவும்விவசாயிகள் கவலை வெளியிடுகினறன. ஏஞ்சிய சில சேனைப்பயிர்ச்செய்கைகளை யானைகள் துவம்சம் செய்ததாக கிராமவிவாயிகள் தெரிவித்தனர்.
தம்பலகாமம்,குச்சவெளி கிண்ணியாப்பிரிவுகளில் கந்தளாய்குளம்மற்றும் யான்ஓயாகுளம் திறந்துவிட்டதனால்ஏற்பட்டவெள்ளத்தின் காரணமாக வேளாண்மைசெய்கைகள் வெள்ளக்காடாகின.
திரியாயில்விவசாயக்காவலுக்குச்சென்ற பல விவசாயிகள் மரத்திலேறி தங்கியிருந்து பின்னர் பலரின் உதவியுடன் மீண்டுள்ளனர். இவ்வாறு எங்கு பார்த்தாலும் வெள்ளத்தின் அவலக்குரல் கதைகள் தொடராகஒலித்த வண்ணமே இருந்தன.
மாவட்டத்தின் விபரங்களைப்பொறுத்தவரை நாளுக்கு நாள் மாறுபட்டவண்ணம் இருந்தன.12ம்திகதி 87 நிலயங்களில் 7824 குடும்பங்களைச்சார்ந்த,29203பேர் என வந்தது. 13ம்திகதி 62 நிலயங்களில் 5148குடும்பங்களைச்சார்ந்த 19140 பேர் இடம்பெயர்ந்ததாக அரச அதிபரின் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பாதிக்கப்ட்ட எல்லோரும் முகாமிற்குபோகவில்லை.அன்றாட தொழில் ஈடுபடும் மற்றும் மாற்றுவழி தேடமுடியாத குறிப்பிட்ட சிலரேமுகாம்களுக்சென்றனர்.மலகூடப்பிரச்சனை பொது இடங்களில் இருந்த இடப்பிரச்சனை சுகாதார அபாயம் என பலவற்றாலும் மக்கள்சிறுசிறு குளுக்களாக பல இடங்களிலும் தங்கியிருந்தனர்.எனவும் கிராமமட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.;இதற்கிடையில் போக்குவரத்து துண்டிக்கப்ட்ட கிராமங்களில் பொருட்களின் விலை கிடுகிடு என ஏறிக்காணப்பட்டன. பொருட்தட்டுப்பாடும் ஏறப்பட்டன.பெற்றோல் டீசல் முற்றாக இல்லாமல் பெரும் பிரச்சனையை நிவாரணப்பணியாளர்கள் அரச அதிகாரிகள் சந்தித்தனர்;.
விவசாயிகளின் அழிவு தொடர்பாக தற்காலிகமான அழிவு தொடர்பான அறிக்கையொன்றை கச்சேரி வெளியிட்டிருந்து.அதன்படி மூதூரில் 7603 கெக்டேயர் மூதூரிலும் குச்சவெளியில் 7809 கெக்டேயரும், தம்பலகமத்தில் 3000 கெக்டேயரும். வெருகலில் 1750கெக்ரேயரும்,கிண்ணியாவில் 4118கெக்ரேயர் நெல்வயல்களும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் மழை போக்குவரத்தே செய்யமுடியாத சூழுல் வீட்டிலிருந்துவெளியேறக்கூட முடியாத நிலையில் இத்தரவு எந்தளவிற்கு உறுதிப்பாடானவை என்று சொல்லமுடியாது எதிர்பார்க்கவும் முடியாது .இந்தசூலில் விவசாயிகளின் அழிவு எனபது மிகமிக அதிகமானதாகவே கருதுப்படுகின்றது.இதற்கிடையில் நீண்டகாலநோக்கில் குளங்கள் கால்வாய்களின் கட்டமைப்புக்களின் அழிவும் அது மக்களுக்கு தரப்போகும் பாதிப்பும் மிக தாக்கத்தை ஏற்படுத்தும். அரசுமற்றும் அரசுசாரா நிறுவனங்களின் உதவி மற்றும் தம்மிடமிருந்த மிச்ச சொச்சங்களயும் பயன்படுத்தி முழுமூச்சுடன் செய்யப்பட்டமாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான விவசாய நடவடிக்கை எனபனவற்றின பாதிப்பு சரியாக கணக்கெடுக்கப்பட காலம் செல்லும்.
இந்த நிலையில் யுத்த அகதி வாழ்வில் இருந்து மீண்டு இயல்புநிலைக்குவரத்துடித்த மக்களின் வயிற்றுப்பிழைப்புக்கு இந்த அனர்த்தம் ஆப்பு வைத்துள்ளது.மீண்டும் ஏதிலிகள் என்ற நிலைக்கிட்டுச்சென்றுள்ளது.மட்டக்களப்புக்குவந்த அனத்தமுகாமைத்துவ அமைச்சர் பாதிக்கப்ட்டஅனைத்து கிராமக்களுக்கும் நிவாரணம் உலர்உணவு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.ஆனால் இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் தான் உலர் உணவு நிவாரணம் என்றெல்லாம் குளப்பகரமான அறிவுப்புகள் வந்தவண்ணமுள்ளன.
இ.ந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்கறியாகியுள்ள நிலையில் மூதூர் வலயக்கல்விப்பிரிவில் இன்று திங்கள்கிழமை (17.01.2011) 38 பாடசாலைகள் மட்டுமே ஆரம்பிக்கபடவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர். அ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார். 81 பாடசாலைகளில்ஏனையவற்றில் வெள்ளமுள்ளது. சிலவற்றில் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் இதன்காரணமாக இப்பாடசாலைகளை ஆரம்ப்பிப்பது தொடா்பாக இன்று தான் முடிவெடுக்க முடியும்.
இதேவேளை வெருகல் பிரிவில் பூமரத்தடிச்சேனை வித்தியாலயம் மட்டுமே ஆரம்பிக்கும்சூழல் உள்ளது ஏனைய பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது. வெருகலில் 16 பாடசாலைகளில் இரண்டைத்தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளிற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. மூதூரில் 9 பாடசாலைகளில் வெள்ளப்பாதிப்புஏற்பட்டுள்ளது. இதனால் பாடசாலை சொத்துக்களுக்கும் பாதிப்புஏற்பட்டுள்ளது. எமது மூதூர் வலயத்தில் மொத்தம் 23 பாடசாலைகள் வெள்ளம் ஏறி பாதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள் வெள்ளம் காரணமாக பல கட்டிடம் மற்றும் மலகூடங்களும்சேதமடைந்துள்ளன.அல்லது ஊறியுள்ளன. இதனால் திருத்தப்பணிகள்மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. எனவும் தெரிவித்தார் மட்டக்களப்பு போன்ற தூர இடங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் வரமுடியாத கூழல் உள்ளது.ஏனெனில் தொடர்ந்து வெருகல் மட்டக்களாப்பு வீpதி வெள்ளத்தில மூழ்கியுள்ளன.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் தமது ஆடைகள் மற்றும் கல்வி உபகரணங்களையும் இழந்த நிலையில் உள்ளனர் இவர்களுக்கான உதவிகள்தேவைப்படுவதாகவும் பாடசாலைகளை துப்பரவுசெய்யவேண்டியதேவையுள்ளன.மற்றும் குடிநீர் மலகூடங்கள் நிறைவடைந்து அசுத்தப்படுத்தப்பட்டுள்ளன.எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனனர்
இது மீழக்கட்டியெழுப்ப மேலும் பல வருடங்கள் செல்லப்போகின்றன.ஏற்கனவே இருக்கும் விலைவாசி ஏற்றத்தில் நெல்ஏற்றுமதி செய்த கிராமங்கள் அவற்றுக்காக காத்திருக்க வேண்டிய சூழல்ஏற்படப்போகின்றது. யுத்த சூழுலில் இருந்து இன்னும் மீழக்குடியமரபோராடும் மக்கள் மூதூரில் இருக்கும் நிலையில் இந்த வாழ்வாதாரச்சிதைப்பு மேலும் மக்களை பெரும் அழுத்தத்திற்குள்ளாக்கியுள்ளது.உழவரின் பொங்கல் திருநாள் இம்முறையும் கைவிட்டுவிட்டது.கவலைக்குரிய நாளாகிவிட்டது. அன்றாடம் அரிசிக்கும் பருப்புக்கும் மங்களை ஆலாய்ப்பறக்கவைத்துள்ளது.எனபது வேதனையின் இறுதி உச்சத்தில் உள்ளது.
இதன்படி தேவைகள் பல அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
1 பாடசாலை உபகரணங்கள்.
2.மாணவர்களுக்கான உடைகள் புத்தகங்கள்
3.பால்மா .சத்துணவு,
4. சாதாரண உடைகள்,
5.பெற்சீற் பாய்கள்,பாத்திரங்கள்.
6.தொழில் ஊக்குவிப்புகள் ,வாழ்வாதாரம்
7.கிணறு சுத்தப்படுத்தல்,சுத்தமான குடிநீர்
Monday, 17 January 2011
Thursday, 13 January 2011
கிழக்கு மாகாண நிலைமை! 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!! வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு
கிழக்கு மாகாண நிலைமை! 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!! வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு | |
இதுவரை வெள்ளத்தில் சிக்கி 18 பேர் மரணமடைந்துள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. உணவுப் பொருட்கள் ஹெலிகப்டர்கள் மற்றும் படகுகள் ஊடாக வழங்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக்காலை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விபரங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலுமாக இதுவரை 9 இலட்சத்து 66 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 57 ஆயிரத்து 993 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. 502 முகாம்களில் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 221 பேர் தங்கியுள்ளனர். மட்டக்களப்பில் 533000 பேர் பாதிப்பு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில் ஐந்து இலட்சத்து 33 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 225 முகாம்களில் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 140 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளது. புதன்கிழமை 113 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்துள்ளது. அம்பாறையில் அம்பாறை மாவட்டத்தில் 88 ஆயிரத்து 376 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 7817 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 744 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 8065 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் 2705 குடும்பங்களை சேர்ந்த 10882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்திலும் வீடுகளுக்கு சேதம் ஏற்படவில்லை. திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நிலைமை ஆரோக்கியமானதாக மாறிவிருகின்றது. மொத்தமாக இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர். 200 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன 2 இலட்சம் ஏக்கர் வயல் நாசம் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் தொடர்ந்து மழை பெய்கின்றது. இதேவேளை இந்த மாவட்டங்களில் இதுவரை 200 சிறியளவிலான குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளன. மட்டக்களப்பு அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் இராணுவத்தினர் கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் பாரிய சேவைகளை வழங்கிவருகின்றனர். அந்த மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளை வழங்குவதில் அவர்கள் பணியாற்றிவருகின்றனர். இரண்டு ஹெலிகப்டர்களில் உணவுகளை அனுப்பி வருகின்றோம். படகுகளிலும் உணவு அனுப்பப்படுகின்றது. மட்டக்களப்பில் அதிகமான பாதிப்பு இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே நிலைமை மேசமாகவுள்ளது. அங்கு உணவு கொண்டுசெல்வதற்கும் சிக்கல்கள் காணப்படுகின்றன. பல சவால்களுக்கு மத்தியில் செயற்பட்டுவருகின்றோம். எனினும் அந்த மாவட்டத்துக்கும் படகுகளில் உணவுகளை அனுப்பிவருகின்றோம். அனர்த்த முகாமைத்துவ நிலையமானது அனைத்து விதமான ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது. அரச நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையில் இணைப்புக்களை ஏற்படுத்திவருகின்றோம். மாவட்ட மட்டத்திலும் பல குழுக்களை அமைத்து செயற்பட்டுவருகின்றோம். அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் காமின ராஜகருண கருத்து வெளியிடுகையில் கூறியதாவது அரச அதிபர்கள் ஊடாக 48 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 25 மில்லியன் ரூபாவும் அம்பாறைக்கு 8 மில்லியன் ரூபாவும் திருகோணமலைக்கு ஐந்து மில்லியன் ரூபாவும் அனுராதபுரத்துக்கு 2.5 மில்லியன் ரூபாவும் பொலன்னறுவைக்கு 3.5 மில்லியன் ரூபாவும் கண்டிக்கு 1.3 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுவிட்டன. மொத்தமாக 48 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு தடவைக் கூட பசியுடன் இருக்காத வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். உலர் உணவு மற்றும் சமைத்த உணவு தண்ணீர் போத்தல்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் என பலவற்றை வழங்கிவருகின்றோம். இதேவேளை பொத்துவில் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற 10 மீனவர்களைக் காணவில்லை என உறவினர்களால் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு முறையிடப்பட்டுள்ளது. அவர் உடனடியாக கடற்றொழில் அமைச்சருடன் தொடர்புகொண்டு காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கைகளை தங்காலை பிரதேச கடற்படைப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. | |
|
மூதூர் கிழக்கில்
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்தைச் சுற்றிலும் வெள்ள நீர் இருப்பதால் அங்கிருந்து படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கான தரைவழிப் போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் காட்டு வெள்ளம் காரணமாக சில இடங்களில் 6 அடிக்கு வெள்ள நீர் பாய்கிறது. ஈச்சிலம்பற்று, வெருகல், முகத்துவாரம், உப்பூறல், மாவடிச்சேனை, ஆனைத்தீவு போன்ற கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. 901 குடும்பத்தினர் இடம்பெயர்ந்துள்ளதால் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்குள் நீர் புகுந்துள்ளதால் அங்கிருந்த நோயாளிகள் சேருநுவர வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர். சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் படகின் மூலமே தமது சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சேருவில பிரதேச செயலாளர் பிரிவிலும் 1000 குடும்பங்கள் இடம்பெயர்ந்து 5 நலன்பு
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் கடும்மழை
பெய்து வருகிறது. இதனால் பாடசாலைகளிலும் பொதுக் கட்டிடங்களிலும் தஞ்சமடைந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஆலங்கேணி,ஈச்சந்தீவு கிராமங்களைச் சேர்ந்த 800 பேர் தற்போது ஆலங்கேணி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் 600 பேர் வரை இப்பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர். நேற்று புதன்கிழமை இந்த எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. இக்குடும்பங்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை இலங்கை ஒஃபர் நிறுவனத்தின் திருகோணமலை அலுவலகம் நேற்று புதன்கிழமை தொடக்கம் வழங்க நடவடிக்கையெடுத்துள்ளது.
முதல் கட்டமாக ஆயிரம் சமைத்த உணவுப் பார்சல்கள் திருகோணமலை நகர மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு புதன்கிழமை நண்பகல் ஆலங்கேணி பாடசாலையில் தங்கியுள்ள அகதிக் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக ஒஃபர் நிறுவன திருகோணமலை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
அகதிகளுக்கு உதவுவதற்காக ஒஃபர் நிறுவனம் திருகோணமலை நகரின் பல பாகங்களிலும் மக்களிடமிருந்து சமைத்த உணவுப் பொருட்கள், உலர் உணவுப் பொருட்களை சேகரித்து வருகிறது.
இதேவேளை, திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்து ஆரம்பப் பாடசாலைக் கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 200 வரையான அகதிகளுக்கு திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்தினர் சமைத்த உணவுப் பார்சல்கள் மற்றும் உதவிகளை வழங்கினர்.
மூதூரில்...
மூதூர்ப் பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பாடசாலைகள்,பொதுக்கட்டிடங்களில் மூதூர் தள வைத்தியசாலையினால் நடமாடும் வைத்திய முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே நடமாடும் வைத்திய முகாம்களை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி
இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
தொடராகப் பெய்துவரும் அடை மழை காரணமாக அனர்த்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை தொடர்வதால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களினதும் இடம்பெயர்பவர்களினதும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சீரற்ற காலநிலையால் தொடராக மழை பெய்து வருவதன் காரணமாக நாட்டில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 78 (228078) குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 63 ஆயிரத்து 773 பேர் பாதிக்க ப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
வெள்ள நிலையி னால் பாதிக்கப்பட் டிருப்பவர்களில் 33 ஆயிரத்து 330 குடும்ப ங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 598 பேர் 359 முகாம்களில் தங்க வைக் கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர் பாக அவர் மேலும் கூறுகை யில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 882 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட் சத்து 82 ஆயிரத்து 323 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 15 ஆயிரத்து 368 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 524 பேர் 146 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் 88 ஆயிரத்து 376 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 38 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7813 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 744 பேர் 49 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 2415 குடும்பங்களைச் சேர்ந்த 11011 பேர் 59 முகாம்களில் தங்கியுள்ளனர். திருமலை மாவட்டத்தில் 7559 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7323 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 478 பேர் 73 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ள நீரினால் பெரும்பாலான பிரதேசங்களுக்குரிய தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகள் மூன்று நான்கு அடிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான அரச கட்டடங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை, ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பலவற்றினுள்ளும் வெள்ள நீர் புகுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுக்கடங்காத வெள்ள நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக குடிநீர் வழங்கல் பிரிவினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தம்; 49 முகாம்களில் மக்கள் தஞ்சம்
நேற்று (செவ்வாய்) பிற்பகல் 3.00 மணி வரை அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 49 அகதி முகாம்களில் தங்கியிருப்பதாக அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
முகாம்களிலுள்ள சகலருக்கும் சமைத்த உணவை வழங்க, அவ்வப் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று நண்பகல் (செவ்வாய்) தொடக்கம் இச் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 25 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அரச அதிபர் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்தில், கல்முனை, அக்கரைப்பற்று, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களிலே, மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேலதிக அரச அதிபர் அசங்க அபே குணவர்தன தெரிவித்தார். நேற்று இம்மாவட்டத்தில், மகா ஓயாவில் இருவர், உகணயில் இருவர், நாவிதன்வெளியில் ஒருவரும் வெள்ளத்தினால் மரணமடைந்திருப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.
ஒலுவில்
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்ட வருவதுடன், நீரேந்து பகுதிகளிலிருந்து நீரை அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மிகரைவில் உலருணவு நிவாரணப் பொருட்கள், வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம். எம். நkர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, பாலமுனை, மீலாத் நகர், அஷ்ரப் நகர், ஒலுவில், சின்னப்பாலமுனை, திராய்க்கேணி ஆகிய கிராமங்களில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கிராம சேவைகர்களூடாக கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நீர்த்தேங்கி நிற்கக்கூடிய மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து நீரை அகற்றும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் இதன்முலம் பெருமளவு நீர், வடிச்சல் மூலம் அகற்றப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் நkர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை பிரசேத்திலுள்ள, பகுதிகளையும், நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தோரின் நிலைமைகளையும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெவ்வை, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், உதவிப் பிரதேச செயலாளர் ஏ. எம். அப்துல் லத்தீப், முன்னாள் பிரதேசசபைத் தவிசாளர் எம் ஏ. அன்சில் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இப்பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழைபெய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நற்பிட்டிமுனை
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழையினால் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 17162 குடும்பங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், உயிரிழப்புக்கள் இரண்டு இடம் பெற்றுள்ளதாகவும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் கல்முனை பொலிஸ் நிலைய தகவல்கள் கூறுகின்றன.
அடை மழையினால் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 10100 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 4500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம். எம். நெளபல் தெரிவித்தார்.
இவர்களில் 70 வீதமானோர் உறவினர் வீடுகளிலும், 30 வீதமானோர் தங்கல் நிலையங்களிலும் தங்கியிருப்பதாகவும், இவர்களுக்கான சமைத்த உணவு கிராம சேவகர் ஊடாக வழங்கப்படுவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளரின் அறிக்கை பிரகாரம் மருதமுனை அக்பர் கிராம பல்தேவை கட்டிடத்தில் 340 குடும்பங்களும், சம்ஷ் மத்திய கல்லூரியில் 225 குடும்பங்களும், புலவர் மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தில் 200 குடும்பங்களும், கல்முனை குடி அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 450 குடும்பங்களும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரவின் பணிப்புக்கமைய இடம்பெயர்ந்தவர்களுக்கான உலர் உணவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 7062 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2509 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்து தங்கியிருப்பதாக தமிழ் பிரிவு பிரதேச செயலவாளர் கே. லவநாதன் தெரிவித்தார்.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளரின் அறிக்கை பிரகாரம் சேனைக்குடியிருப்பு கணேஷ் மகா வித்தியாலயத்தில் 922 குடும்பங்களும், பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயத்தில் 62 குடும்பங்களும், பாண்டிருப்பு விஷ்ணு வித்தியாலயத்தில் 211 குடும்பங்களும் பெரியநீலாவணை விஷ்ணு வித்தியாலயத்தில் 714 குடும்பங்களுக்கும், நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தில் 194 குடும்பங்களும், விவேகானந்தா வித்தியாலயத்தில் 524 குடும்பங்களும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அதேவேளை, தமிழ் பிரிவுக்குட்பட்ட துரவந்தியமேடு கிராமத்தில் உள்ள அனைவரும் படகுகளில் வேறு பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக கல்முனை பொலிஸ் பிரிவில் வெள்ளத்தால் மூழ்கி இருவர் பலியாகியுள்ளதுடன், இதில் மூழ்கிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த 53 வயதுடைய சிந்தாத்துறை கனக சுந்தரம், பெரிய நீலாவணையைச் சேர்ந்த முருகுப்பிள்ளை நடராஜா (47) ஆகியோரே நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தார்.
நீரில் மூழ்கிய பெரிய நீலாவணையைச் சேர்ந்த செல்வன் பாபு, கே. எதிஸ்டர் ஆகியோர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
மட்டு. மாவட்டத்தில் 85 வீத மக்கள் பாதிப்புஏறாவூர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் 85 சதவீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க உதவி அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.
14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 185 நலன்புரி முகாம் இயங்குகின்றன. 28376 குடும்பங்களைச் சேர்ந்த 105, 747 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் 28 முகாம்கள் உள்ளன.
20189 குடும்பங்களைச் சேர்ந்த 59193 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வாகரை பிரதேசத்தில் 4272 குடும்பங்களைச் சேர்ந்த 14687 பேர் இடம்பெயர்ந்து 9 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பனிச்சங்கேணி பாலம் பாதிக்கப்பட்டுள்ளதனால் கதிரவெளி, புளிச்சாக்கேணி, பாற்சேனை, அம்பந்தனாவெளி, ஊரியன்கட்டு, கட்டுமுறிவு, தோணிதாட்ட மடு, மருதன்கேணிக் குளம், ஓமடியாமடு, வாகரை வடக்கு மற்றும் மத்தி ஆகிய பிரதேசங்களுக்கான தரைவழிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு 4055 குடும்பங்களைச் சேர்ந்த 14520 பேர் நிர்க்கதியாகியுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ராகுல நாயகி தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் ஹெலிகொப்டர் மூலமான உணவு விநியோகம் தாமதமடைகிறது.
உழவு இயந்திரங்கள் மூலம் மக்கள் வெளியேற்றம்
ஏறாவூர் பிரதேசத்தில் மிக மோச மாகப் பாதிக்கப்பட்ட மக்களை ஏறாவூரில் உள்ள பொது அமைப்பு க்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் முன்வந்து உழவு இயந்திரங்க ளின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாடசாலைகளிலிருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு வகைகளை ஏறாவூரில் உள்ள பொது அமைப்புக்கள் வழங்கி வருகின்றன.
வெற்றிலைத் தோட்டங்கள் நாசம் துறைநீலாவணை
களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், களுவாஞ்சிகுடி, எருவில் ஆகிய கிராமங்களில் வெற்றிலைச் செய்கையில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தமது தொழிலை இழந்துள்ளன.
சந்தையில் வெற்றிலைக்கான தட்டுப்பாடு நிலவுவதுடன், வெற்றிலையின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அரிசி ஆலைகள் வெள்ளத்தில்வாழைச்சேனை
கல்குடா தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, மாஞ்சோலை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, தியாவட்டவான், மைலங்கரச்சை, கிண்ணையடி கறுவாக்கேணி, சுங்கான்கேணி, கிரான், புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீதிகள் மற்றும் குடிமனைகளனைத்தும் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
ஓட்டமாவடிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அமீர்அலி விளையாட்டரங்கு - மைதானம் என்பனவும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இராணுவத்தினர் பொலிஸார் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை நல்கினர்.
தொற்றுநோய்கள் பரவும் ஆபத்துஏறாவூர்
மக்கள் மத்தியில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள் ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீரின் மூலமாகவே தொற்று நோய்கள் பரவக்கூடிய சூழ்நிலை அதிகம் காணப்படுவதால் மக்கள் கொதித்தாறிய நீர் மற்றும் போத் தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என்பவற்றைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன்புரி நிலையங்களில் மிக நெருக்கமாக தங்கவைக்கப் பட்டுள்ளதால் நோய்கள் பரவும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
1957ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட பெருவெள்ளம்பட்டிப்பளை
1957ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென வயோதிபர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான அனைத்துப் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமத்துக்கு கிராமம் போக்குவரத்துக்குள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார, மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் 4 வைத்திய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்குழுக்களில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் கள் அடங்குகின்றனர்.
வான்கதவுகள் திறக்கப்பட்டதால் கிராமங்கள் வெள்ளத்தில்
திருகோணமலை மாவட்டத்தில் அடைமழையினாலும் மற்றும் கந்தளாய் குளம், ஏனைய சிறு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாலும் கிண்ணியா பிரதேசத்தில் பல வீதிகள், மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தாழ்ந்த பகுதிகளிலுள்ள மக்களை வள்ளங்கள் மூலம் பல பொது அமைப்புக்கள் மேட்டு நிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருகின்றன.
கிண்ணியா பிரதேச செலயகப் பிரிவில் சமாவச்சதீவு, பூருவரசந்தீவு, ஈச்சந்தீவு, கிரான், மஜீத் நகர், வட்டமடு, மணியரசங்குளம், குட்டித்தீவு, முனைச்சேனை, காக்காமுனை, நெடுந்தீவு, பட்டியனூர், மகமார், நடுஊற்று, ஆயிலியடி போன்ற பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சமாவச்சதீவு, பூவரசந்தீவு, சூரங்கல், ஆயிலியடி, தம்பலகமம், வான்எல, சல்லிக்களப்பு போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்வயல்கள் அழிவு
திருகோணமலை மாவட்டத்தில் பன்னிரெண்டாயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் அழிந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ. உகநாதன் தெரிவித்தார்.
குடலைப் பருவமான இறுதிக்கட்டத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்கள் அழிந்துள்ளன.
சேனைப்பயிர்கள், மேட்டு நிலப்பயிர்கள், உப உணவுப்பயிர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிதா வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வெளியேறுகிறது.
புதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வெளியேறுகிறது.

மட்டக்களப்பில் 52வருடங்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஓர் முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோடவைக்கப்படுகிறது. மட்டக்களப்பு நகரைச் சூழவுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக மேற்படி முகத்துவாரம் அகழப்பட்டு தற்போது வெள்ள நீர் வெகுவாக வெளியேற்றப்படுகிறது
Subscribe to:
Posts (Atom)